Thursday, 12 June 2014

toward innate

TOWARD INNATE

முன்னுரை:

இயல்பான இயற்கையின் உள்ளார்ந்த பொருள்
பெயரில்லாத ஆக்கிரமிப்புகள் இயல்பை நோக்கிய வளர்ப்பாகும்

இயற்கை நெறிமுறைகள் வாழ்க்கைக்கு அடிப்படையான கூறுகளாக உள்ளண.  இந்த இயல்பின் ஆய்வறிக்கை இயற்கையினின்று பெறப்பட்ட இயல்பான அறிவாகும்.    இயல்பைப் பற்றி, ஆழ்மனதில் சிந்திப்பதன் மூலம், உண்மையான புரிதலை உருவாக்குகிறது. ஒருவருடைய இயல்பைப் பொருத்து, அவருடைய சொந்த வாழ்க்கை வரையறுக்கப்படுகிறது. நாம் உள்ளார்ந்த இயல்புடன் பிறந்து இருக்கின்றோம் என்ற நீங்கா நினைப்பே சிறந்தது.

   இங்கு வழங்கப்பட்டுள்ள கருத்துக்கள் சுயமானவை என்று உறுதியளிக்கவில்லைஇவை அனைத்தும் உட்பொருளிலிருந்து செதுக்கப்பட்டுள்ளன. உண்மையின் உட்பொருளைப் பற்றி எழுத்தில், யாருமே சுயமானது என்று பொதுவாகக் கூறமுடியாது. இயல்பு என்பது இங்கே புதிய துவக்கம் அல்லது புதிய அர்த்தத்தை மட்டுமே குறிக்கும்.

  உள்முகப்பாதை குறிக்கோள் பற்றி ஒரு தெளிவான கருத்தை நீங்கள் அடைய விரும்பி இருந்தால் இக்கட்டுரை உங்களுக்கு உதவும் என்று நம்புகிறேன். இயல்பை நோக்கிய நமது நடைமுறைப்பயிற்சி, நமது உள்ளார்ந்த இயல்பை அறிதலில் வரும்.

  நாம் நம் உள்ளார்ந்த இயல்பில் இருந்து விலகி, நமது உணர்வுக்கருத்தை தழுவி, நமது வெளிஉண்மையை அனுமதிக்கும் படிவங்கள் மாயையே. நமது இருப்புதான் நம் வாழ்க்கைக்கு ஆதாரமாக உள்ளது. இயல்பை நோக்கிய பயணமே சாலச்சிறந்தது.

  “இயற்கை, இயல்பை அறியச் செய்யும்.
 “இயல்பை உணர்ந்தால், நம் உடனிணைந்த இயற்கையை அறிய முடியும்.
இவ்வுலகின் இயல்பை நோக்கிய தெளிவான புரிதலை எய்தலாம்”.